தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதன் காரணமாக மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகளும் கல்லூரி மாணவர்களுக்கு தேர்வுகளும் நடந்து கொண்டிருக்கின்றன. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால் பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வருவதால் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டு வருகிறது. இதனை அடுத்து தமிழகத்தில் ஆகஸ்ட் முதல் வாரத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து மருத்துவர்களிடம் கேட்டிருப்பதாக பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். பள்ளிகளை திறக்க சொல்லி ஆசிரியர்கள் சங்கத்தினர் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும் மூன்றாவது அலையையும் கருத்தில் கொண்டே பள்ளி திறப்பு குறித்து முடிவு எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.