தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டது. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு அனைத்து மாணவர்களுக்கும் பொதுத் தேர்வுகள் நடத்த படாமலேயே ஆல்பாஸ் அறிவிப்பை அரசு வெளியிட்டது. இந்நிலையில் அடுத்த கல்வி ஆண்டு தொடங்கிவிட்டது. இதற்கு மத்தியில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையவில்லை என்பதால் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தபட உள்ளது.
இதனைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதற்கு மத்தியில் தமிழகத்தில் ரத்து செய்யப்பட்ட தேர்வுகளுக்கு மதிப்பெண் வழங்கும் பணி போடும் பணி இருப்பதால் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் சுழற்சி முறையில் பள்ளிக்கு வர அறிவுறுத்தப்பட்டு உள்ளது. எனவே அனைத்து ஆசிரியர்களும் காலை 9 மணிக்கு பள்ளிக்கு வர வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் பணிக்கு வராதவர்கள் மீது நடவடிக்கை திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.