Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு தேர்வு…? வெளியான அதிரடி உத்தரவு…!!

தமிழகத்தில் 9 முதல் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இதனையடுத்து 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருப்பதால், பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டு பள்ளிகள் திறக்கப்பட்டன.

தற்போது தமிழகம் முழுவதிலும் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் பிளஸ் 2 மாணவர்களுக்கு பொதுத் தேர்வு மே 3ஆம் தேதி தொடங்கி 21ஆம் தேதி முடிவடையும் என பள்ளி கல்வித்துறை அறிவித்தது.

மேலும் 12ஆம் வகுப்பு மாணவர்களை தவிர மற்ற அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்வு இல்லாமல் ஆல் பாஸ் செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. ஆனால் தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. பெரும்பாலும் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் 9 முதல் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ் என அறிவிக்கப்பட்டதை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து உத்தரவிட்டுள்ளது. ஆல் பாஸ் தொடர்பாக அரசு ஆலோசனை நடத்தவில்லை என்ற வாதத்தை ஏற்க முடியாது. மேலும் 11ஆம் வகுப்பு மாணவர்களின் தகுதியை கண்டறிய அந்தந்த பள்ளிகள் தேர்வு நடத்திக் கொள்ளலாம். 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுக்கு வழிகாட்டு விதிகளை பள்ளிக்கல்வித்துறை அறிவிக்க வேண்டுமென தெரிவித்துள்ளது.

Categories

Tech |