தமிழகத்தில் புதியதாக பத்து பேருந்து நிலையங்களை அமைக்க தமிழக அரசு 115 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி திருப்பூர், ஓசூர், கூடலூர், அரியலூர், வடலூர், வேலூர், வேதாரண்யம், புதுக்கோட்டை, குளச்சல், பொள்ளாச்சியில் புதிய பேருந்து நிலையங்கள் அமைய உள்ளது. திருப்பூரில் 26 கோடி மற்றும் ஓசூரில் 30 கோடி மதிப்பில் புதிய பேருந்து நிலையங்கள் அமைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இரண்டு மாநகராட்சிகள் மற்றும் எட்டு நகராட்சிகளில் புதிய பேருந்து நிலையங்களை அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Categories