தமிழகம் உட்பட ஐந்து மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கும் என்று நேற்று தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்தார். இதையடுத்து அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி வருகின்றன. மேலும் கூட்டணி குறித்தும் ஒரு சில கட்சிகளில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதனால் அரசியல் களம் சூடு பிடித்துள்ளது.மேலும் நடத்தை விதிகளும் அமலுக்கு வந்துள்ளன.
இந்நிலையில் ரஜினி கட்சி ஆரம்பிக்க இருந்த நிலையில் பாஜகவிலிருந்து விலகி ரஜினி கட்சின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜுன மூர்த்தி நியமிக்கப்பட்டார். ரஜினி கட்சி ஆரம்பிக்கததால், தற்போது இந்திய மக்கள் முன்னேற்ற கட்சி என்ற புதிய கட்சியை தொடங்கி உள்ளார். ஆனால் இந்த கட்சிக்கும் ரஜினி மக்கள் மன்றத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. கட்சியின் வாசகமாக “சத்தியம், சமத்துவம், சமர்ப்பணம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.