நாடு முழுவதும் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. இதனால் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் நாளுக்கு நாள் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன.இதையடுத்து தற்போது ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். தமிழகத்தில் இரவு ஊரடங்கு உள்ளிட்ட கடுமையான் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஆனாலும் கொரோனா உயிரிழப்பு அதிகரித்து வருகிறது.
எனவே கொரோனா பரவல் அதிகரித்து வரும் சூழலில் கொரோனாவை கட்டுப்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தலைமையில் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் அடங்கிய 11 ஒருங்கிணைப்பு குழுக்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இதில் கொரோனாவை கட்டுப்படுத்த வேண்டிய நடவடிக்கை குறித்து ஆலோசிக்க உள்ளனர். இதனால் தமிழகத்தில் சில கட்டுப்பாடுகள் விதிக்க வாய்ப்புள்ளது.