தமிழகத்தில் அமைக்க BA 4 வகை கொரோனா கண்டறியப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்ரமணியன் அதிர்ச்சி செய்தியை வெளியிட்டுள்ளார் .செங்கல்பட்டு மாவட்டம் நாவலூரில் ஒருவருக்கு புதிய வகை கொரோனா உறுதியாகியுள்ளது. மீண்டும் கொரோனா வேகமெடுக்கும் நிலையில் புதிய கொரோனா உறுதியாகி உள்ளது.
மேலும் பாதிக்கப்பட்டவர் நலமுடன் இருப்பதாகவும் நோய் தொற்றிலிருந்து குணமடைந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார். அவர் தொடர்பில் இருந்த யாருக்கும் பாதிப்பு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமை BA 4 கொரோனாவின் முதல் பாதிப்பு ஹைதராபாத்தில் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.