தமிழகத்தில் ஆரணியை புதிய மாவட்டமாக அறிவிக்கப்படும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் பல கட்சிகள் போட்டி போட்டு தங்களது பிரச்சாரங்களை நடத்தி வருகின்றனர். தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டு மக்களை கவர்ந்து வருகின்றனர். அதிமுக எப்படியாவது இந்த முறையும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறது.
நேற்று திருவண்ணாமலை மாவட்டம் ,ஆரணியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது ஆரணியை தலைமையாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும் ஏற்கனவே கும்பகோணம் மாவட்டமாக மாற்றப்படும் என கூறிய நிலையில், மேலும் ஒரு புதிய மாவட்டத்தை உருவாக்க அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.