அரசு மருத்துவ காப்பீடு திட்டத்தில் கடந்த நான்கு வருடங்களில் ரூ.2,368 கோடி காப்பீடு நிறுவனங்களுக்கு வருவாயாக சென்றுள்ளது என்ற அதிர்ச்சித் தகவல் வெளியா உள்ளது. 2016 முதல் 2017 காலகட்டத்தில் ரூ.928 கோடியாக இருந்த காப்பீடு பிரீமியம் தொகை படிப்படியாக உயர்ந்து 2016-2021 காலகட்டத்தில் 10,716 கோடி செலுத்தப்பட்டுள்ளது. அதேநேரம் நோயாளிகளுக்கு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனை மூலம் 5,736 கோடியும், அரசு மருத்துவமனை மூலம் ரூ.2,602 கோடி மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது.
எனவே கடந்த நான்கு வருடங்களில் மட்டுமே ரூ.2368 கோடி வரை மக்களுக்கு எந்தவித பயன்பாடும் இல்லாமல் காப்பீட்டு நிறுவனங்களுக்கு மட்டுமே இலாபமாக சென்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மருத்துவ காப்பீடு விவகாரத்தில் ஏதேனும் முறைகேடு அல்லது மோசடி ஏதாவது நடந்து இருக்குமா என்று சந்தேகத்தை எழுப்பியுள்ளது.