தமிழகத்தில் அரசு பேருந்துகள் மற்றும் விரைவுப் பேருந்துகளின் ஆயுட்காலத்தை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி 3 ஆண்டு அல்லது 7 லட்சம் கிலோ மீட்டராக இருந்த அரசு விரைவு பேருந்தின் ஆயுட்காலம் 7 ஆண்டுகள் அல்லது 12 லட்சம் கிலோமீட்டர் ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 6 ஆண்டு அல்லது 7 லட்சம் கிலோ மீட்டராக இருந்த மற்ற அரசு பேருந்துகளின் ஆயுட்காலம் 9 ஆண்டு அல்லது 12 லட்சம் கிலோமீட்டர் ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.
Categories