தமிழகத்தில் அரசு பேருந்துகளில் பயண சீட்டு கட்டணம் விரைவில் உயர்த்தப்பட உள்ளதாகவும் அது குறித்து அரசு பரிசீலனை செய்து வருவதாகவும் செய்தி வெளியாகியது. போக்குவரத்து கழகம் 48,500 கோடி கடனில் உள்ளது. அதனால் தொலைதூரப் பயணம் தொடர்பான பேருந்து கட்டண உயர்வு பட்டியலை அதிகாரிகள் தயார் செய்து வருவதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில் தமிழக அரசு போக்குவரத்து கழக பேருந்துகளில் பயணச்சீட்டு கட்டணம் உயர்த்தப்படவில்லை என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். தமிழக அரசு பேருந்து கட்டண உயர்வு குறித்து உலவி வரும் வதந்திகளை மக்கள் யாரும் நம்ப வேண்டாம். பேருந்து கட்டண உயர்வு குறித்த அட்டவணை எதுவும் தயாரிக்கப்படவில்லை என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் சற்றுமுன் விளக்கம் அளித்துள்ளார்.
Categories