Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் பேருந்து சேவை, டாஸ்மாக் – அரசு அதிரடி…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை  தீவிரமாக பரவி வரும் நிலையில், தளர்வுகளற்ற  முழு ஊரடங்கு ஜூன்- 7ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்டிருந்தது. இந்த ஊரடங்கின் காரணமாக தமிழகத்தில் சில மாவட்டங்களில் தொற்று பாதிப்பு குறைந்துள்ளது. இருப்பினும் கோவை உள்ளிட்ட ஒரு சில மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை இன்னும் குறையவில்லை.

இந்நிலையில் தமிழகத்தில் மேலும் ஒரு வாரத்திற்கு அதாவது ஜூன் 7-ஆம் தேதி முதல் ஜூன் 14 ஆம் தேதி வரை சில தளர்வுகள் உடன் முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள காரணத்தால் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் தெரிவித்துள்ளார்.

இதில் ஒருசில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. அதன்படி, மளிகை, காய்கறி, இறைச்சி கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் பேருந்து சேவை உள்ளிட்ட பொது போக்குவரத்துக்கு தடை நீடிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் சலூன் கடைகள், தேநீர் கடைகளை திறக்க அனுமதி அளிக்கப்படவில்லை.

Categories

Tech |