தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும், எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி ஜூலை 5ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் 27 மாவட்டங்களில் ஜூன் 28 காலை 6 மணி முதல் பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மாவட்டத்திற்குள் மாவட்டங்களைக் இடையேயும் அரசு விரைவு பேருந்துகள், சார்புடைய போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் 50% பயணிகளுடன் இயக்கலாம். மேலும் 27 மாவட்டங் களுக்கு இடையே போக்குவரத்து சேவைக்கு அனுமதி தரப்பட்டதால் தொலைதூர பேருந்துகள் இயங்கும் என்றும் தெரிவித்துள்ளது.