Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் மதுக்கடைகளை மூட நேரிடும்…. உயர்நீதிமன்றம் எச்சரிக்கை….!!!!

தமிழகத்தின் மலைப்பகுதிகளில் உள்ள மதுக்கடைகளை திரும்பப் பெறுவதற்கான திட்டத்தை வகுக்க டாஸ்மாக் நிர்வாகத்திற்கு உயர் நீதிமன்றம் கெடு விதித்துள்ளது. வருகின்ற ஏப்ரல் 25-ஆம் தேதிக்குள் திட்டத்தை வகுக்கவில்லை என்றால் மதுபான கடைகளை மூட உத்தரவிட நேரிடும் என நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மலைப்பகுதிகளில் உள்ள மதுபான கடைகளில் கண்ணாடி பாட்டில்களை வனப்பகுதிகளில் வீசுவதால் வனப்பகுதி மற்றும் வனவிலங்குகள் பாதிக்கப்படுவதாக நீதிமன்றம் தானாக முன்வந்து இந்த வழக்கை விசாரித்து வருகிறது. அந்த வழக்கு விசாரணையில் தமிழகத்திற்கு அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |