Categories
மாநில செய்திகள்

#BREAKING: தமிழகத்தில் மார்ச் 10 முதல் 12ஆம் தேதி வரை…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!!

தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் முதல்வர் தலைமையில் ஆட்சியாளர்கள், காவல்துறை உயர் அதிகாரிகள் மாநாடு நடைபெறுவது வழக்கம் ஆகும். அந்த அடிப்படையில் திமுக ஆட்சி புதிதாக பொறுப்பேற்ற பிறகு இதுவரையிலும் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்களுடன் ஆலோசனை கூட்டம் மேற்கொள்ளப்படாமல் இருந்தது.

இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மார்ச் 10 முதல் 12ஆம் தேதி வரை மாவட்ட ஆட்சியர்கள் மாநாடு நடைபெறும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இவ்வாறு மூன்று நாட்கள் நடைபெறும் மாநாட்டில் மாவட்ட நிர்வாகம், சட்டம் ஒழுங்கு, வளர்ச்சிப்பணிகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார்.

Categories

Tech |