Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் மார்ச் 31 வரை ஊரடங்கு… அரசு அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் மார்ச் 31-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவைகள் அனைத்தும் முடக்கப்பட்டன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டதால், தற்போது ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. தற்போது வரை பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் தமிழகத்தில் மார்ச் 31ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே அறிவிக்கப்பட்டு, நடைமுறையிலுள்ள தளர்வுகள், கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு தொடரும். மேலும் பொது இடங்களுக்கு வருபவர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். பொது இடங்களில் தனிநபர் இடைவெளியை பொதுமக்கள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது

Categories

Tech |