நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் 40 சதவீதம் நிலக்கரியிலிருந்து பெறப்படுகிறது. கோடையை முன்னிட்டு ஏற்பட்டுள்ள வெப்ப அளவு உயர்ந்துள்ளது. இதனால் மின் தேவையும் அதிகரிக்கின்றது. நாடு முழுவதும் நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் மின் வினியோகத்தில் தடை ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் இருளில் மூழ்கும் நிலைமைக்கு ஆளாகினர்.
இந்த நிலையில் தமிழகத்தில் மின் உற்பத்தி அதிகரித்துள்ளதால் வெளிமாநிலங்களுக்கு விற்பனை செய்யப்படுவதாக அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். மேலும் கடந்த காலங்களை விட தற்போது கூடுதலாக மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. எந்த இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்பட்டாலும் பராமரிப்பு பணி அல்லது பழுது காரணமாக இருக்கும் என்று கூறியுள்ளார்.