தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துமாறு மத்திய அரசு எச்சரித்துள்ளது.
இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு எல்லைகள் அனைத்தும் மூடப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வந்த நிலையில், ஊரடங்கு தளர்வுகளை அரசு அறிவித்து வருகிறது. அதன்படி வெளிநாடுகளிலிருந்து வரும் மக்கள் இந்தியாவில் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இருந்தாலும் கொரோனா பரிசோதனை கட்டாயம். அவ்வாறு கொரோனாவும் உறுதி செய்யப்பட்டால் அவர்கள் 15 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு அனுமதிக்கப்படுகிறார்கள்.
இந்நிலையில் பல மாநிலங்களில் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதன்படி தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாக மத்திய அரசு எச்சரித்துள்ளது. புதிதாக உருவான மொத்த பாதிப்பில் 86.36% தமிழகம், கேரளா, கர்நாடகா, பஞ்சாப், மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலங்களில் மட்டும் ஏற்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கண்காணித்து கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தும் வரும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதுமட்டுமன்றி மீண்டும் ஊரடங்கு அமல் படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.