Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் மீண்டும் கட்டுப்பாடு அதிகரிப்பு – அதிர்ச்சி தகவல்…!!!

நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது.

மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா அதிகரித்து வருவதால் ஒரு சில கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்நிலையில் கொரோன வைரஸ் உருமாறி கொண்டே இருப்பதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார். அடுத்த மூன்று வாரங்களுக்கு பொதுமக்கள் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும். தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். தற்போது இருப்பதைவிட கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்படும் எனவும் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

Categories

Tech |