தமிழகத்தில் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கின் காரணமாக பாதிப்பு எண்ணிக்கை சற்று குறையத் தொடங்கியதால் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தது. இதற்கு மத்தியில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் கூடுதல் தளர்வுகள் எதுவுமின்றி ஆகஸ்ட் 9 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆகஸ்ட் 9ஆம் தேதி என்று ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் தமிழகத்தில் மேலும் ஊரடங்கு நீட்டிப்பது மற்றும் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தபடுவது குறித்து முதல்வர் ஸ்டாலின், மருத்துவ வல்லுனர்கள் மற்றும் அதிகாரிகளுடன் நாளை ஆலோசனை நடத்த உள்ளார். அதன்பிறகு ஊரடங்கு நீட்டிப்பது குறித்த அறிவிப்பு வெளியாக உள்ளது. பெரும்பாலான மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் ஊரடங்கில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.