நாடு முழுவதும் கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் தங்களுடைய இயல்பு வாழ்க்கையை இழந்து வீட்டுக்குள்ளேயே முடங்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பினார். இந்நிலையில் தற்போது மீண்டும் கொரோனா , உருமாறிய கொரோனா வேகம் எடுக்கத் தொடங்கியுள்ளது. இதனால் ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் ஆயிரத்து 1636 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை பெரும் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. இன்று 12 பேர் உயிரிழந்துள்ளனர். 1023 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் மீண்டும் டிஸ்சார்ஜ் எண்ணிக்கையைவிட பாதிப்பு எண்ணிக்கை அதிகரிப்பதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.