தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் கடுமையான ஊரடங்கு அமல் படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவைகள் அனைத்தும் முடக்கப்பட்டது. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கிக் கிடந்தனர். அதன்பிறகு மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால்,கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து வருகிறது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.
இந்நிலையில் தமிழகம், கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் கொரோனா அதிகரித்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆறு மாநிலங்களிலும் ஒரே நாளில் 85.95% பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கடுமையான ஊரடங்கு அமல் படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்தே மக்கள் வெளியே செல்லும்போது தனிமனித இடைவெளியை கடைப்பிடிப்பது கட்டாயம் எனவும் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.