கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகம் முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளது. அதனால் கடந்த கல்வி ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவே வகுப்புகளும் தேர்வுகளும் நடத்தப் பட்டன. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்பு குறித்து எந்த ஒரு அறிவிப்பும் தற்போது வரை வெளியாகவில்லை.
இந்நிலையில் ஆகஸ்ட் 9ஆம் தேதி முதல் அனைத்து பேராசிரியர்களும் கல்லூரிக்கு வர உயர் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. வரும் 9ஆம் தேதி முதல் கல்லூரிகளுக்கு ஆன்லைன் வகுப்புகள் தொடங்குவதாகவும், அதனால் அனைத்து பேராசிரியர்களும் கல்லூரிக்கு வர வேண்டுமென தொழில்நுட்பக் கல்வி இயக்ககம், பல்கலைக்கழக பதிவாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.