Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் மீண்டும் 1-8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. அதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்ததால், தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்ட நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது.

இதனிடையே தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியது. அதுமட்டுமல்லாமல் உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் தமிழகத்தில் அதிவேகமாக பரவி வருகிறது. அதனால் தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு ஜனவரி 10-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் அங்கன்வாடி பள்ளிகள், நர்சரி பள்ளிகள், 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜனவரி 10-ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் 1 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கு நுண்ணிலை முறையில் நேரடி வகுப்புகள் நடத்திட அரசு ஆவண செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு ஆசிரியர் சங்க மாநில தலைவர் பி.கே. இளமாறன் வலியுறுத்தியுள்ளார். கொரோனா அதிகரிப்பு காரணமாக 1 முதல் 8ஆம் வகுப்பு வரை நேரடி வகுப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், மீண்டும் நேரடி வகுப்பு நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

Categories

Tech |