திமுக முன்னாள் அமைச்சர் பூ.ம.செங்குட்டுவன் உடல்நலக்குறைவு காரணமாக திருச்சி வேல குறிச்சியில் இன்று காலமானார். இவர் 1996 ஆம் ஆண்டு திருச்சி மருங்காபுரி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். திமுக ஆட்சியில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சராகவும் கால்நடைத் துறை அமைச்சராகவும் இருந்துள்ளார். இவர் உடல் நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் அனைவரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
Categories