Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் முதல்வர்… சற்று முன் அதிகாரப்பூர்வ அதிரடி உத்தரவு…!!!

கல்வி சேர்க்கையில் வன்னியர்கள், சீர்மரபினர், இதர மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு சிறப்பு ஒதுக்கீடு வழங்குவது குறித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

அரசுப்பணி நியமனங்களிலும், கல்வி வாய்ப்புகளிலும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்கள் மற்றும் சீர்மரபினர்களுக்கு வழங்கப்படும் 20% இட ஒதுக்கீடு வன்னியர்கள் சீர்மரபினர் மற்றும் இதர மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு சிறப்பு ஒதுக்கீடு வழங்கி தமிழ்நாடு சட்டம் 8/2021 இயற்றப்பட்டது. அந்த சட்டத்தின் அடிப்படையில் அரசு பணி நியமனங்களில் பின்பற்றப்பட்டு வரும் இன சுழற்சி முறையை திருத்தி அமைக்க சட்ட வல்லுநர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் விரிவாக ஆலோசனை நடத்தி நிச்சயமாக ஒரு நல்ல முடிவு எடுக்கப்படும் என்று மாண்புமிகு முதல்வர் அவர்கள் சட்டப்பேரவையில் உறுதி அளித்து இருந்தார்.

அதன்படி சட்ட வல்லுநர்கள் மற்றும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையர் துடன் கலந்து ஆலோசிக்கப்பட்டு, இந்த சிறப்பு ஒதுக்கீடு 26 2 2021 முதல் செயல்படுத்துவதற்கான அரசாணையை இன்று மாண்புமிகு முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டார். இது மட்டுமின்றி இந்த ஆண்டு முதல் தொழில் கல்வி உள்ளிட்ட அனைத்து கல்வி சேர்க்கைகளும் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான மேற்கூறிய சிறப்பு ஒதுக்கீடு முறையின் அடிப்படையிலேயே நடத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |