தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் ஞாயிறு ஊரடங்கு, இரவு ஊரடங்கு உள்ளிட்ட ஊரடங்கு நடவடிக்கைகளும், கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் கடமையாக்கப்பட்டு வந்தது. இருப்பினும் நாளுக்கு நாள் இறப்பு வீதங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பதால் மருத்துவமனைகளில் கூட இடமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். தற்போது முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் கொரோனா இரண்டாவது அலையில் பணியாற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் ஊக்கத்தொகை அறிவித்துள்ளார். ஏப்ரல், மே, ஜூன் மாத காலத்திற்கு ஊக்கத்தொகையாக மருத்துவர்களுக்கு ரூ.30,000, செவிலியர்களுக்கு 20 ஆயிரம் மற்ற பணியாளர்களுக்கு 15,000, பட்டமேற்படிப்பு மருத்துவர்கள், பயிற்சி மருத்துவர்களுக்கு 20,000. மேலும் கொரோனாவால் உயிரிழந்த 43 மருத்துவர்கள் குடும்பத்துக்கு தலா 25 லட்சம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.