Categories
மாநில செய்திகள்

Breaking: தமிழகத்தில் முன்கூட்டியே தேர்தல்… வெளியான தகவல்…!!!

தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் முன்கூட்டியே தொடங்கியுள்ளதால் சட்டமன்ற தேர்தல் இந்த வருடம் முன்கூட்டியே நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் தமிழக சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக நட்சத்திர ஹோட்டலில் இந்திய தேர்தல் ஆணைய செயலாளர் உமேஷ் சின்கா, மாவட்ட தேர்தல் அலுவலர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுடன் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.

மேலும் தேர்தலுக்கான அறிவிப்பு வரும் முன்னரே முன்னணி அரசியல் கட்சித் தலைவர்கள் பரப்புரையை தொடங்கியுள்ளதால், முன்கூட்டியே தேர்தல் நடைபெறும் என கூறப்படுகிறது. தமிழகத்தில் வழக்கமாக மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியாகும். ஏப்ரல் இறுதி அல்லது மே தொடக்கத்தில் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது.

Categories

Tech |