நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து கொண்டே வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. அதுமட்டுமல்லாமல் உருமாறிய ஒமிக்ரான் வைரஸ அதிவேகமாக பரவி வருவதால் அனைத்து மாநிலங்களிலும் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்திலும் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் ஜனவரி 10 வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் தமிழகத்தில் முழு பொது முடக்கம் தேவையில்லை, மக்கள் மாஸ்க் அணிந்து கட்டுப்பாடுகளை பின்பற்றினால் போதுமானது என்று WHO தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். ஒமிக்ரான் 4 மடங்கு வேகமாக பரவுகிறது. சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், அனுமியா உள்ளிட்ட நோய் பாதிப்புகள் இனி அதிகரிக்கக்கூடும். இதற்கிடையில் பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டால் மரணத்தை தவிர்க்கலாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.