Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் மேலும் ஒரு பள்ளியில் கொரோனா… பெரும் அதிர்ச்சி…!!!

தஞ்சாவூரில் மேலும் ஒரு பள்ளியில் 2 ஆசிரியர்கள் ஒரு மாணவிக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இதனையடுத்து 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருப்பதால், பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டு பள்ளிகள் திறக்கப்பட்டன. தற்போது தமிழகம் முழுவதிலும் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் தமிழகத்தில் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு, கடந்த சில நாட்களாக மீண்டும் அதிகரித்து வருவதால் அச்சம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தஞ்சை அம்மாபேட்டை அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 56 மாணவிகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. மேலும் அங்கு படிக்கும் மாணவிகளின் பெற்றோர்கள் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. ஏற்கனவே 56 மாணவிகளுக்கு கொரோனா உறுதியான நிலையில், தற்போது 5 பெற்றோருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் தஞ்சாவூரில் மேலும் ஒரு பள்ளியில் 2 ஆசிரியர்கள் ஒரு மாணவிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை தஞ்சாவூரில் ஐந்து ஊர்களில் உள்ள ஆறு பள்ளிகளில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து இருவாரங்களுக்கு பள்ளிகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

Categories

Tech |