தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஏற்கனவே அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கை நீட்டித்து மேலும் ஒரு வாரத்திற்கு தளர்வுகளற்ற கடுமையான ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதனால் தொற்று பாதிப்பு சற்று குறைந்து வருவதாக முதல்வர் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு செயல்பாடுகள் குறித்து டிஜிபி காவல் ஆணையர், உயர் அதிகாரிகளுடன் முதல்வர் முக ஸ்டாலின் அவசர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். முழு ஊரடங்கிலும் சிலர் கட்டுப்பாடுகளை மீறி வெளியே சுற்றுவதால் ஊரடங்கினை மேலும் கடுமையாக்குவது தொடர்பாக ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.