தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. மக்களும் தங்களுடைய வாக்கினை செலுத்தினர். இதையடுத்து தேர்தல் வாக்குப் பதிவு முடிந்தததையடுத்து வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மே இரண்டாம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகியுள்ளன.
அதன்படி இந்தியா டுடே: திமுக கூட்டணி 175 – 195, அதிமுக கூட்டணி 38 – 54, அமமுக 1 – 2, மநீம 0 – 2, இதர 0-3 தொகுதிகள் வெற்றி பெற வாய்ப்பு.
ஏபிபி – சிவோட்டர்: திமுக கூட்டணி 160 – 172, அதிமுக கூட்டணி 58 – 70, அமமுக 0 – 2, மநீம 0 – 2, இதர 0-3 தொகுதிகள் வெற்றி பெற வாய்ப்பு.
டைம்ஸ் நவ்: திமுக கூட்டணி 166, அதிமுக கூட்டணி 64, அமமுக 1 , இதர 0-3 தொகுதிகள் வெற்றி பெற வாய்ப்பு.
டுடே சானக்யா நியூஸ் 24: திமுக கூட்டணி 175, அதிமுக கூட்டணி 57, இதர 0-3 தொகுதிகள் வெற்றி பெற வாய்ப்பு.