தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகளை விதிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. மேலும் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது, இதைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு என்ற அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது. இன்று காலை முழுஊரடங்கு நிலவும் ஞாயிற்றுக்கிழமைகளில் ரயில்களை இயக்கவும் தடை விதித்துள்ளது.
இதைத் தொடர்ந்து தமிழகத்தில் தற்போது புதிய கட்டுப்பாடுகளை விதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் உடன் சேர்ந்து மேலும் சில கட்டுப்பாடுகளை விதிக்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. இரவு நேர ஊரடங்கு நேரம் அதிகரிப்பு, அலுவலகத்தில் பணியாற்றுவோர் இன் எண்ணிக்கை குறைப்பு உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் இன்று மாலை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.