தமிழகத்தில் திருச்சி சேதுராப்பட்டியில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் 15 மாணவர்களுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இதனையடுத்து 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருப்பதால், பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டு பள்ளிகள் திறக்கப்பட்டன. தற்போது தமிழகம் முழுவதிலும் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன.
பெரும்பாலும் தமிழகம் முழுவதிலும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தமிழகத்தின் பல இடங்களில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வரும் நிலையில், இன்று திருச்சி சேதுராப்பட்டியில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் 15 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் 250 மாணவர்களிடம் சோதனை நடத்தியதில் 15 பேருக்கு கோரோணா உறுதியானதை அடுத்து, அரசு கல்லூரியில் மூடப்பட்டுள்ளது.