Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் தொடங்கியது…!!

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தேர்தல் ஆணையமும் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. ஒவ்வொரு கட்சியிலும் கூட்டணி குழப்பமும், தொகுதி பங்கிடுவதில் இழுபறியும் நீடித்து வருகிறது. இதனால் தேர்தல் களம் பரபரப்பாக உள்ளது. இதையடுத்து ஒவ்வொரு கட்சியிலும் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு வருகின்றது. இதையடுத்து தற்போது தேர்தலுக்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில் 234 தொகுதிகளிலும் வேட்புமனு தாக்கல் தொடங்கியது. சனி மற்றும் ஞாயிறு தவிர மார்ச் 19 வரை தினமும் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வேட்புமனு தரலாம். மேலும் SC, ST பிரிவினருக்கு டெபாசிட் தொகை ரூபாய் 5000 மற்றவர்களுக்கு ரூபாய் 10,000 ஆகும். வேட்பு மனுக்களை பெற்று ஆன்லைனிலேயே பெற்று கட்டணத்தை ஆன்லைனிலேயே செலுத்தி கொள்ளலாம்.

Categories

Tech |