தமிழகத்தில் புதிய மின் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் புதிய மின் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளதாக தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது. 2026- 2027 வரை புதிய மின் கட்டண உயர்வு அமலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 8 ஆண்டுகளுக்குப் பின் மின் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
புதிய மின்கட்டண உயர்வில் 100 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இனி 101 – 200 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு மாதம் 27.50 என 2 மாதங்களுக்கு சேர்த்து 355 ரூபாயும், 201 – 300 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு 2 மாதங்களுக்கு சேர்த்து ரூ.145 ரூபாயும், 301- 400 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு 2 மாதங்களுக்கு சேர்த்து 295 கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.