தமிழகத்தில் 10 மற்றும் 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எப்போது தொடங்கும் என்பது பற்றி அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இதனையடுத்து 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருப்பதால், பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டு பள்ளிகள் திறக்கப்பட்டன.
தற்போது தமிழகம் முழுவதிலும் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் பிளஸ் 2 மாணவர்களுக்கு பொதுத் தேர்வு மே 3ஆம் தேதி தொடங்கி 21ஆம் தேதி முடிவடையும் என பள்ளி கல்வித்துறை அறிவித்தது.
இந்நிலையில் 10 மற்றும் 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எப்போது தொடங்கும் என்பது குறித்த கேள்வியை பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்துவது பற்றிய ஆய்வு பணி நடைபெற்று வருவதாக. நேரு பதினொன்றாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. பொதுத்தேர்வுகள் தொடர்பாக முதல்வருடன் ஆலோசித்த பிறகு அறிவிக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.