தமிழகத்தில் கொரோனா அதிகரித்துவரும் காரணத்தினால் பன்னிரண்டாம் வகுப்பு ஒத்தி வைப்பது தொடர்பாக கல்வித்துறை தீவிர ஆலோசனை செய்து வருகிறது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் தமிழக அரசு பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. முககவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்றவற்றை செயல்முறை படுத்தி வருகின்றது. கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்களை வலியுறுத்தி வருகின்றது.
இருப்பினும் கடந்த சில நாட்களில் கொரோனா தீவிரமடைந்துள்ளது. இதன்காரணமாக 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்தி வைப்பது குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் கல்வித்துறை முதன்மை செயலாளர் தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். மே 3ஆம் தேதி 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில் ஜூன் மாதத்திற்கு தள்ளி வைப்பது தொடர்பாக ஆலோசனை நடைபெற்று வருகிறது.