Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம்…!!!

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக இன்று 14 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், இன்னும் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்திருந்தது.

இந்நிலையில் தமிழகத்தில் இன்று 14 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சற்றுமுன் வானிலை ஆய்வு மையம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, நாமக்கல், கரூர், திருச்சி, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என தெரிவித்துள்ளது. மேலும் மன்னார் வளைகுடா மற்றும் குமரி கடல் பகுதிகளில் மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என்பதால் மீனவர்கள் 3 நாட்களுக்கு அப்பகுதிக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |