ஏப்ரல் 20, 21-ந் தேதிகளில் தமிழகத்தில் பல மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் வாட்டி வந்தது. இந்நிலையில் தற்போது இரண்டு நாட்களுக்கு சில மாவட்டங்களில் மழை பெய்தது. இதனால் வெப்பத்தின் தாக்கம் குறைந்து சற்று குறைந்த நிலை உருவானது. இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் ஒரு தகவலை வெளியிட்டுள்ளது.
ஏப்ரல் 20, 21 தேதிகளில் தமிழகத்தின் பல மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும் என்று எச்சரித்துள்ளது. சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 22 மாவட்டங்களில் இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிக்கும். மேலும் சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று தெரிவித்துள்ளது.