தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 70 பேர் உயிரிழந்துள்ளது மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
அதிகபட்ச உயிரிழப்பாக தலைநகர் சென்னையில் 1,431 பேரும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 194 பேரும், திருவள்ளூர் மாவட்டத்தில் 159 பேரும், மதுரை மாவட்டத்தில் 155 பேரும் உயிரிழந்தனர். இந்த நிலையில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த தகவலை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதில், தமிழகத்தில் இன்று மேலும் 70 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு 2,551ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் இன்று புதிதாக இதுவரை இல்லாத உச்சமாக 4,985பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் மொத்த பாதிப்பு 1,75,678 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் இன்று மட்டும் 1,298 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த பாதிப்பு 87,235ஆகியுள்ளது. இன்று மேலும் 3,861 குணமடைந்து வீடு திரும்பியதால் 1,21,776 கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்.