தமிழகத்தில் உள்ள அங்கீகாரம் இல்லாத மனைகள் மற்றும் கட்டிடங்களை வரன்முறை செய்யும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது. அதன்படி அங்கீகராம் இல்லாமல் விதிகளை மீறி கட்டப்பட்ட கட்டிடங்களை வரன்முறைப்படுத்தும் திட்டமானது கடந்த 2017ம் வருடம் ஜூன் மாதம் நடைமுறைபடுத்தப்பட்டது. இதற்கான காலஅவகாசம் பலமுறை தொடர்ந்து நீடிக்கப்பட்டு வருகின்றது.
இதனைத்தொடர்ந்து தமிழகத்தில் விதிமீறலுடன் கட்டப்பட்ட கட்டடங்களை வரன்முறை செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதாவது விதிமீறலுடன் கட்டப்பட்ட கட்டடங்களை வரன்முறை செய்ய ஜூன் 30ஆம் தேதியுடன் அவகாசம் முடிந்த நிலையில் தற்போது மேலும் 3 மாதங்களுக்கு கால அவகாசத்தை தமிழக அரசு நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.