தமிழகத்தில் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கு காரணமாக கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வருகிறது. இதனால் ஊரடங்கில் தளர்வுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின்பு மீண்டும் மக்கள் கொரோனா வழிமுறைகளைக் கடைப்பிடிக்காமல் பொதுஇடஙக்ளில் கூட்டம் கூடத் தொடங்கியுள்ளனர்.
இதனால் கொரோனா பரவும் அபாயம் உருவாகியுள்ளது. இந்நிலையில் கொரோனா மூன்றாவது அலையை தடுப்பது குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் இறையன்பு ஆலோசனை நடத்தினார். மூன்றாவது அலை வராமல் தடுக்க முகாம்களை அதிகரிப்பது, சுகாதாரப் பணியாளர்களை முடுக்கி விடுவது, தொற்று பரவல் அதிகரிக்கும் பகுதிகளில் கட்டுப்பாடு விதிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.