கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது. இதனால் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பெரும்பாலும் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு இந்த கருப்பு பூஞ்சை தொற்று பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் கண்பார்வை இழக்கும் நிலை சில சமயம் ஏற்படுகிறது.
இந்நிலையில் கோவையில் கருப்பு பூஞ்சை நோயால் இதுவரை 30 பேருக்கு ஒரு கண்ணில் பார்வை போயுள்ளதாக அரசு மருத்துமனை தலைமை டீன் நிர்மலா தெரிவித்துள்ளார். தாமதமாக வந்ததால் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் முன்கூட்டியே வந்திருந்தால் பார்வை இழப்பைத் தவிர்த்திருக்கலாம் என்றும் கூறியுள்ளார். இதுவரை 390 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 113 பேருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளார்.