Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் 4 நாட்களுக்கு கனமழை நீடிக்கும்…. வானிலை ஆய்வு மையம்….!!!!

தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிவரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 4 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்றும், ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிவந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி அதே இடத்தில் நீடித்துக் கொண்டிருக்கிறது. அது தற்போதைய சூழலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாறுவதற்கான வாய்ப்புகள் இல்லை.

இந்நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் நான்கு நாட்களுக்கு கனமழை நீடிக்கும். ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். அந்தமான் கடல் பகுதியில் வருகின்ற 29ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதற்கு பிறகு அடுத்த 48 மணி நேரத்தில் அது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று மேற்கு வடமேற்கு திசையில் நகரும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

Categories

Tech |