தமிழகத்தில் 5 மாவட்டங்களில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால் மக்களின் நலனை கருத்தில் கொண்டு கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது.
இதனையடுத்து மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்கள். கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் மீண்டும் ஊரடங்கு அமல் படுத்தப்படும் நிலை உருவாகியுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் கடந்த 5 நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு ஆயிரத்தை கடந்து வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் தமிழகம் முழுவதிலும் கொரோணா கட்டுப்பாட்டு விதிமுறைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, கோவை, திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதனால் மக்கள் அனைவரும் கொரோணா விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி முக கவசம் அணிவது மற்றும் சமூக இடைவெளி கடைபிடிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.