Categories
மாநில செய்திகள்

Breaking: தமிழகத்தில் 6 மாதம் ஜனாதிபதி ஆட்சி…. புதிய பரபரப்பு….!!!

தமிழகம் முழுவதிலும் உள்ள 234 தொகுதிகளில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்தது. அதில் பல வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதனையடுத்து வாக்குபெட்டிகள் அனைத்தும் மூன்று அடுக்கு பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. மேலும் மே 2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கையை நிறுத்த வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி வலியுறுத்தியுள்ளார். நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலை ரத்து செய்ய வேண்டும். தமிழகத்தில் 6 மாத காலத்திற்கு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |