Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் 6 மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. சற்றுமுன் அறிவிப்பு….!!!!

தெற்கு வங்க கடலில் நிலவிவரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாற வாய்ப்பில்லை என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இருந்தாலும் நவம்பர் 29ஆம் தேதி அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று தெரிவித்துள்ளது. இந்நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் இன்று காலை முதல் லேசான மழை பெய்து வருகிறது. ஒரு சில மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகின்றது.

இந்நிலையில் தூத்துக்குடி, நெல்லை மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் அதிக கன மழை பெய்வதற்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதனால் தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டத்தில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ராமநாதபுரம், புதுக்கோட்டை மற்றும் நாகை ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலார்ட் எச்சரிக்கை விடுக்கப்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கனமழை காரணமாக நாளை தூத்துக்குடி, நெல்லை, புதுக்கோட்டை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து திருவாரூர் மற்றும் மதுரை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளிக்கப்படுவதாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.

Categories

Tech |