தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்டங்களையும் முதல்வர் ஸ்டாலின் செய்து வருகிறார். கொரோனா பேரிடர் காலத்திலும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழக அரசு வழங்கி வருகிறது. அதுமட்டுமல்லாமல் பெண்களுக்கு சிறப்பு சலுகைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் விழுப்புரம், திண்டுக்கல், ஈரோடு, கரூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் தேனி ஆகிய 7 மாவட்டங்களில் குழந்தை திருமணம், பெண் சிசுக்கொலை போன்ற சமூக அவலங்களை களைய அதற்கான சட்டங்களை கடுமையாக அமல்படுத்த முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்த மாவட்டங்களில் குழந்தை திருமணங்கள் குறித்த புகார்கள் அதிகம் வருவதால் அதிகாரிகள் சிறப்பு கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.