Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் 7 மாவட்டங்களுக்கு அலர்ட்…. வானிலை ஆய்வு மையம்….!!!!

தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியில், நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, தென்காசி, குமரி மற்றும் நெல்லை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும். எனவே பள்ளிக்கு செல்வோர், அலுவலகம் செல்வோர் குடை உள்ளிட்டவற்றை எடுத்துச் செல்லவும். சாலையில் மின்கம்பிகள் அறுந்து கிடந்தால் அருகில் செல்ல வேண்டாம் என்று தெரிவித்துள்ளது. மேலும் மழை காரணமாக நீலகிரியில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |